Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 8, 2022

ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு! - விரைவில் அரசாணை!


அரசுப் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2013-ஆம் ஆண்டுக்கு முன் TRB மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததை தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment