JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் மே மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு ஜூன் 20 ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதாதவர்கள், தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூலை 25ம் தேதி நடைபெற உள்ளது.
இவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் நாளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் இத்தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மொத்தம் 806277 பேர் பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இதில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment