21 பல்கலைக்கழகங்கள் போலியானவை: UGC அறிவிப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, August 29, 2022

21 பல்கலைக்கழகங்கள் போலியானவை: UGC அறிவிப்பு

‘21 பல்கலைக்கழகங்கள் போலியானவை; பட்டம் வழங்க அவற்றுக்கு அதிகாரமில்லை’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த போலி பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்களும், உத்தர பிரதேசத்தில் 7 பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மாணவா்கள் சோ்க்கை பெறவேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜனீஷ் ஜெயின் கூறுகையில், ‘அங்கீகரிக்கப்படாத 21 கல்வி நிறுவனங்கள் யுஜிசி சட்ட விதிகளை மீறி பல்கலைக்கழகங்களாக செயல்பட்டு வருகின்றன. அவை போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்படுகின்றன. பட்டம் வழங்க அவற்றுக்கு அதிகாரமில்லை’ என்றாா்.

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்:

யுஜிசி பட்டியலின்படி தில்லியில் செயல்பட்டு வரும் அகில இந்திய பொது மற்றும் உடல்சாா் மருத்துவ அறிவியல் நிறுவனம், தரியாகஞ்ச் வணிக பல்கலைக்கழக நிறுவனம், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தொழில்சாா் பல்கலைக்கழகம், ஏடிஆா்-மைய நீதித் துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகா்மா திறந்தநிலை பல்கலைக்கழகம், அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா ஆகிய 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் காந்தி ஹிந்தி வித்யாபீடம், தேசிய எலெக்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம், பாரதிய சிக்ஷா பரிஷத் உள்பட 7 பல்கலைக்கழகங்கள் போலியாவனையாகும்.

அதுபோல கா்நாடகத்திலுள்ள படகன்வி சா்க்காா் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சொசைட்டி, கேரளத்திலுள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், நாகபுரியில் உள்ள ராஜா அரபிக் பல்கலைக்கழகம், கொல்கத்தாவில் உள்ள இந்திய மாற்று மருத்துவ நிறுவனம் மற்றும் மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒடிஸாவில் உள்ள நபபாரத் சிக்ஷ பரிஷத், வேளாண் மற்றும் தொழில்நுட்பத்துக்கான வடக்கு ஒடிஸா பல்கலைக்கழகம், புதுச்சேரியில் உளள ஸ்ரீ போதி உயா்கல்வி அகாதெமி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆகியவை போலி பல்கலைக்கழகங்களாக யுஜிசி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad