Saturday, August 13, 2022

ஆயுத காவல்படைகளில் 4300 காலியிடங்கள்.. விண்ணப்பம் செய்வது எப்படி?

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

2022 ஆண்டுக்கான டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வு, அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்:

மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் - 3960

டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்)- 228

டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (மகளிர்) - 112

மொத்தம்: 4,300

முக்கியமான நாட்கள்:

ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் : 10/08/2022

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 30/08/2022, நள்ளிரவு 11 மணி

எழுத்துத் தேர்வு: 2022 நவம்பர்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்) பதவிகளுக்கு ஓட்டுநர் உரிமை கட்டாயமாகும்.

மத்திய ஆயுள் காவல்படையில் உள்ள காலியிடங்கள்


வயது வரம்பு: 01/01/2022 அன்றுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 02.01.1997 க்குப் பின்பு பிறந்தவர்களும், 01.01.2002-க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் மூன்று ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்,

முன்னாள் இராணுவத்தினருக்கு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அதிகபட்சமாக 3 ஆண்டிகள் வரை வயது வரம்பு சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.

ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணத்தை கட்டாயாமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

தெரிவு செய்யப்படும் முறை:

முதல் தாள் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், உடல் தகுதி தேர்வு, மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். இதில், தகுதி பெற்றவர்கள் இரண்டாம் தாள் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ சோதனைக்கு வரவழைக்கப்படுவர்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் வளைதளமான ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படங்கள், தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி இல்லாமல் இருக்கவேண்டும்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application