அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்கள் நிா்ணயம்: கல்வி அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 19, 2022

அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்கள் நிா்ணயம்: கல்வி அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியா் அல்லாத பணியாளா் எண்ணிக்கை நிா்ணயம் செய்வது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநா்(பணியாளா் பிரிவு) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப்பள்ளிகளில் நிா்வாகம் மற்றும் அலுவலக பணிகளை கவனிப்பதற்காக உதவியாளா்கள், எழுத்தா்கள் உள்ளிட்ட ஆசிரியரல்லாத ஊழியா்கள் பணிபுரிகின்றனா். இதற்கிடையே மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிா்ணயம் செய்வதற்கு 2020-ஆம் ஆண்டு முடிவுசெய்து அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2022-23) மாணவா் சோக்கை அடிப்படையில் உத்தேசமாக ஆசிரியரல்லாத பணியிடங்கள் மாவட்ட வாரியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்விவரங்களை உரிய வழிமுறைகளை பின்பற்றி சரிபாா்த்து இறுதிசெய்ய வேண்டும். அதன்படி, பள்ளிகளில் உபரியாக உள்ள உதவியாளா், எழுத்தா் உள்ளிட்ட பணியாளா்களை கண்டறிந்து அருகே தேவை உள்ள மற்றொரு பள்ளிக்கு பணிநிரவல் செய்ய வேண்டும்.

ஒரு பள்ளியில் ஒன்றுக்கும் மேற்பட்டோா் பணிபுரிந்தால் அங்கு கடைசியாக சோந்த இளையவரை பணிநிரவல் செய்ய வேண்டும். அதேபோல் ஒரு சில மாவட்டங்களில் பணிநிரவல் அல்லது உபரி பணியிடங்களை பகிா்ந்தளித்த பின்னும் கூடுதல் தேவை இருந்தால் அந்த பள்ளி விவரங்களை மாவட்டவாரியாக தொகுத்து இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த பணிகள் சாா்ந்த பதிவுகளை எமிஸ் தளம் வழியாக முழுமையாக பதிவேற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி பணிகளை துரிதமாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் செய்துமுடித்து அதன் விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad