JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் புற்றுநோய்க்கும் சிறந்தது மருந்து வேப்ப எண்ணெய்.
இது புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வேப்ப எண்ணெய்யுடன் சுத்த தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து, உடலில் தேய்த்து விட்டு இரவில் படுத்தால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளில் இருந்து தப்பிக்கலாம்.

வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வாரத்திற்கு ஒரு முறை உடலில் நன்கு தடவி குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளைமை தோற்றத்தை அதிகரிக்கும்.
உடலில் அடிப்பட்ட இடங்களில் வேப்ப எண்ணெய்யை தேய்த்தால் சீக்கிரம் கிருமிகள் இறந்து காயங்கள் குணமாகும் தன்மை கொண்டது. சைனஸ் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேப்ப எண்ணெய்யை 2 துளி மூக்கில் விட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை தீரும்.
மழைக்காலங்களில் பலருக்கு காலில் சேற்று புண்கள் ஏற்படுவது உண்டு, அவர்கள் பாதங்களில் வேப்ப எண்ணெய்யை தேய்த்தால் புண்கள் குணமாகும். மேலும் உடலில் படர்தாமரை போன்றவை ஏற்படுபவர்களுக்கு வேப்ப எண்ணெய் ஓர் சிறந்த மருந்தாக இருந்து வருகிறது.
சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் உடலில் வேப்ப எண்ணெய் தடவி விட்டு காலையில் எழுந்து நன்கு கழுவ வேண்டும். இது மாதிரி தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் சொரியாசிஸ் பிரச்சனை நீங்கும்.
No comments:
Post a Comment