Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 9, 2022

நித்திய கல்யாணி மூலிகையின் பயன்கள் !!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நித்தியகல்யாணி அருமருந்தாக வேலை செய்கின்றது. மேலும் இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

நித்திய கல்யாணியின் வேரை சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

நம் உடலின் வெள்ளை அணுக்களின் அதிகரிப்பு காரணமாக ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கின்றது அதனை சரிசெய்ய நித்தியகல்யாணி சூரணமாக சாப்பிடுவதன் மூலம் வராமல் பாதுகாக்கலாம்.

உடம்பு சோர்வாக இருந்தால் சுறுசுறுப்பு படத்த நித்யகல்யாணி பூக்களை கொய்து கால் லிட்டர் தண்ணீருடன் காய்ச்சி பிறகு வடிகட்டி குடித்தால் சுறுசுறுப்பு அடையும். நித்திய கல்யாணி பூக்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இதன் பூ மற்றும் வேர்களை பொடி செய்து சுடு தண்ணீரில் கலந்து மூன்று வேளைகளும் குடித்துவந்தால் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

நித்திய கல்யாணியின் இலையை அரைத்து தலையில் தேய்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சியாக வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நித்யகல்யாணி பூக்களை சுடு தண்ணீரில் காய்ச்சி அதை வடிகட்டி குடித்தால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை பல்வேறு மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுகின்றது மேலும் புற்று நோய்க்கு அருமருந்தாக மூலப்பொருட்கள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment