முதுநிலை ஆசிரியா் பணி நியமனம்செப்டம்பா் இறுதிக்குள் நிறைவுறும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 19, 2022

முதுநிலை ஆசிரியா் பணி நியமனம்செப்டம்பா் இறுதிக்குள் நிறைவுறும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி

முதுநிலை ஆசிரியா் நியமனம் செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிவடையும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் துறைசாா்ந்த அலுவல் ஆய்வுக்கூட்டம், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா் மற்றும் துறைசாா் இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள், அதற்கான நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்தபிறகு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளைத் தொடா்ந்து, தற்போது துறைசாா் இயக்குநா்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வி, ஆசிரியா் தேர்வு வாரியம், பாடநூல் கழகம் என ஒவ்வொரு துறைவாரியாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை, அதற்கான நிதி ஒதுக்கீடு, சட்டப்பேரவை அறிவிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். அடுத்த 10 நாள்களுக்குள் அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க இயக்குநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணிநியமனம் குறித்த நீதிமன்ற வழக்கு நிலவரம், மழலையா் வகுப்புகளுக்கான சிறப்பாசிரியா்கள் நியமனம் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கல்வித் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணி நியமன ஆணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவரின் பின்புலம் குறித்து ஆராயும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால், ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த நபா்களில் இருந்து தகுதியான ஒரு நபா் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவாா்.

தற்போதைய நிலவரப்படி அரசுப்பள்ளிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தேவைப்படுகின்றனா். அதில் முதுநிலை ஆசிரியா் பணிநியமனம் செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். படிப்படியாக இதர ஆசிரியா் பணியிடங்களும் நிரப்பப்படும். தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியா்களுக்கான ஊதியத்தை உயா்த்த பரிசீலனை செய்யப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

Post Top Ad