JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே காலாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் பாட காலாண்டு தேர்வு முன்கூட்டியே வெளியான தகவல் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, பள்ளியின் தலைமையாசிரியர் வினாத்தாளை அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியரிடம் வழங்கியதும், அவர் அதனை தேர்வுக்கு முதல்நாளே மாணவர்களிடம் வழங்கி படித்து வரச் சொல்லி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இந்த வினாத்தாளை பட்டதாரி கணித ஆசிரியர் படம் பிடித்து வெளியிட்டதும் தெரிய வந்தது.
No comments:
Post a Comment