மத்திய அரசின் `திறன் அடிப்படையிலான' கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஓர் வாய்ப்பு! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, September 14, 2022

மத்திய அரசின் `திறன் அடிப்படையிலான' கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஓர் வாய்ப்பு!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு (CSSS) விண்ணப்பிப்போருக்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள அந்த அறிவிப்பின்படி, கல்வி உதவித் தொகை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதாரில் உள்ளது போல் பதிவிட வேண்டும். பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதாருடன் வங்கிக்கணக்கு புத்தக நகலையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த அறிவிப்பை மத்திய உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 என்று 3 ஆண்டுகளுக்கு ரூ.30,000, முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 என்று 2 ஆண்டுகளுக்கு ரூ.40,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad