JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் பெருமக்கள் அமர்ந்திருந்த மேடையில் பேசிய, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மதிப்புமிகு திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள், நமது கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளார்.
ஆசிரியர்களுக்கு பதிவுகள் தயாரித்தல், எழுத்து பணி உள்ளிட்ட பிற பணிகளை குறைத்து, கற்பித்தல் பணிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.
கல்வித்துறையின் நிர்வாக கட்டமைப்பு பழையபடி செயல்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அமைச்சர் பெருமக்கள் வீற்றிருந்த அவையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பேசிய பாடநூல் கழகத் தலைவர் ஐயா திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களை மனதார பாராட்டுகிறோம். நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment