Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 22, 2022

ஜூலை 1 முதல் 38 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை

மத்திய அரசு உயர்த்திய 4 சதவீதஅகவிலைப்படியையும் சேர்த்து கடந்த ஜூலை 1 முதல் கணக்கிட்டு 38 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், கு.வெங்கடேசன் தலைமையிலான அகரம் அணி வெற்றி பெற்றது. தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிலையில் கடந்த அக்.14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, ஜூலை 1 முதல் கணக்கிட்டு 38சதவீதம் அகவிலைப்படி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து இரு தினங்களுக்குமுன் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில்பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள உயர்த்தப்பட்ட 4 சதவீத அக விலைப்படியையும் சேர்த்து கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 38 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும். 

முடக்கப்பட்ட சரண் விடுப்பை உடனே வழங்க வேண்டும். அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர் நிலையில்பணியமர்த்துவதை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment