JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. பொது விநியோகம் கணினிமயமாகப்பட்ட பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விற்பனை அதிகரிக்க இயந்திரத்தின் மூலமாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கருவிழி பதிவு அவசியம் என்ற நடைமுறைய அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தற்போது பயோமெட்ரிக் கைரேகை பதிவு முறை பின்பற்றப்படுகிறது.ஆனா அதில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு பிரச்சனையால் ரேஷன் பொருட்களை வாங்குவதில் தாமதம் ஏற்படுவதால் இந்த முறை அறிமுகப்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment