JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான ஆட்கள் நியமனம்.வருவாய்த் துறையின் அறிவிப்பு.
தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை ஆணையர் எஸ் கே பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்யும்படி வருவாய் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தகவலின் படி விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் நவம்பர் 7ஆம் தேதியும் விண்ணப்பத்தினை பரிசீலிக்க நவம்பர் 14ஆம் தேதியும், இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் எழுத்து தேர்வு நவம்பர் 30ஆம் தேதியும்,டிசம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நேர்காணல் தேர்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 10ஆம் தேதி இதற்கான தேர்வு அறிக்கினை எவ்வாறு தெரிந்து கொள்வது?
நியூஸ் பேப்பர் மற்றும் அந்தந்த மாவட்டங்களின் இணையதள முகவரியில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிக்கையினை நாம் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அந்தந்த வட்டாட்சியர் மற்றும் கிராம அலுவலகங்களிலும் இதற்கான அறிக்கினை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment