Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 12, 2022

சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு. வீட்டிலேயே இதைப் பண்ணுங்க!


சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு என டிப்ஸ் கொடுத்துள்ளார் டாக்டர் ஆஷா லெனின்.

மருத்துவர் ஆஷா லெனின் ஆன்லைன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதைக் கூறினார்.

அந்தப் பேட்டியில் அவர், கொய்யா காய், விதைகள் மற்றும் இலைகளின் பல்வேறு மருத்துவக் குணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது, 'கொய்யா விதைகளை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இது மூளைக்கு பயிற்சி கொடுப்பது போன்றது. மேலும் கொய்யா பழம் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது.

மேலும், 5 கொய்யா இலை, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஆவாரம் பூ, இந்த ஆவாரம் பூ கிடைக்கவில்லையென்றால் ஆவாரம் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம்.

  • 1/ கொய்யா பழம், விதை மற்றும் இலையின் பயன்களை அடுக்கினார் மருத்துவர் ஆஷா லெனின்

  • அந்தப் பொடி ஒரு ஸ்பூன். அப்படியே ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அரை டம்ளர் வடிகட்டி குடிக்க வேண்டும். சுகர் 300-400, 500 இருக்கு.. என்ன பண்ணணும் என்றால், நான் இதைத் தான் பரிந்துரைப்பேன்' என்றார்.

தொடர்ந்து பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் குறித்தும் பேசினார். அப்போது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வலி அதிகமாக இருக்கும்.
அந்தக் காலக்கட்டத்தில் வெந்தயம் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சொல்வோம். ஆனால் கொய்யா காய் எடுக்க வேண்டும். தினமும் கொய்யா காய் எடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வலி பெரிதாக வராது' என்றார்.

தொடர்ந்து குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தைகள் சிவப்பாக மாற வாய்ப்பில்லை, ஆனால் தினமும் கொய்யா காய் சாப்பிட்டால் இது சாத்தியமாகலாம்' என்றார்.

No comments:

Post a Comment