Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 7, 2022

உங்க தொப்பையைக் குறைத்து எடையை வேகமாக குறைக்க இந்த 5 டீக்களில் ஒன்றை தினமும் குடித்தால் போதுமாம்...!




உடல் எடையை குறைக்கும் போது உடனடியாக எதையும் செய்துவிட முடியாது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு கப் தேநீர் குடிப்பது ஆரோக்கியமான, சீரான உணவு மற்றும் அடிக்கடி உடற்பயிற்சியுடன் இணைந்தால் எடைக்குறைப்பு செயல்முறையை விரைவுபடுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

க்ரீன் டீ மற்றும் பிற வகை தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதாகவும், கொழுப்பு இழப்பை ஊக்குவிப்பதாகவும், புற்றுநோய்க்கு எதிரான கவசமாக இருப்பதாகவும் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேநீரில் உள்ள சில இரசாயனங்கள் கொழுப்பை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கொழுப்பைக் குறைக்க உதவும் 5 வகையான தேநீர் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

க்ரீன் டீ

கேடசின்கள் நிறைந்த, இந்த தேநீர் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமானது, ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கொழுப்பு திசுக்களை எரிக்க உதவுகிறது, இதன் விளைவாக கொழுப்பு செல்களில் இருந்து கொழுப்பை வெளியிடுகிறது.

வெள்ளை தேநீர்

இது புதிய கொழுப்பு செல்களை உருவாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், செயல்படும் ஆற்றலை உற்பத்தி செய்ய கொழுப்பைப் பயன்படுத்தவும் உதவுகிறது. இது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது, வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகிறது மற்றும் செல்கள் உடைவதைத் தடுக்கிறது.

ப்ளாக் டீ

இத்தாலிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தினமும் ஒரு கப் பிளாக் டீ குடிப்பது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டம் மற்றும் இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, ஆனால் அதில் பால் சேர்ப்பது இந்த நன்மைகளை எதிர்க்கும்.

ஊலாங் தேநீர்

ஊலாங் டீ என்பது சீன மூலிகை தேநீர் ஆகும், இது எடை இழப்புக்கு உதவுவதாக அறியப்படுகிறது. ஊலாங் டீயை தொடர்ந்து உட்கொள்வது ஒரு நபரின் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது உடலில் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

அஸ்வகந்தா தேநீர்

அஸ்வகந்தா தேநீர் மிக முக்கியமான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த தேநீர் தூக்கம் பிரச்சனையால் போராடுபவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற உதவுகிறது.

தேநீர் நல்லதா?

தேநீரின் மருத்துவ குணங்கள் மற்றும் நேர்த்தியான சுவைக்காக பலர் தேநீர் அருந்தினாலும், ஒவ்வொரு கோப்பைக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த ருசியான மற்றும் பரவலாகக் கிடைக்கும் தேநீர்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் உடல் எடையைக் குறைக்கும் நோக்கத்தை அடைய உதவும்.

No comments:

Post a Comment