Thamizhkadal WhatsApp Channel

மணியாச்சி முறுக்கு

தேவையானவை:

மைதா - 2 கப்,
அரிசி மாவு - ¼ கப்,
பொடித்த சர்க்கரை - ¼ கப்,
தேங்காய்ப் பால் - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை,
எண்ணெய் பொரிக்க.

செய்முறை:

பேக்கிங் பவுடர், மைதாமாவு இரண்டையும் சேர்த்து சலித்து இதில் அரிசிமாவு, பொடித்த சர்க்கரை, தேங்காய்ப்பால் அனைத்தையும் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு முறுக்கு அச்சை எண்ணெயில் தோய்த்து எடுத்து அதில் முறுக்கினை பிழிந்து அப்படியே மோல்டோடு எண்ணெயில் விடவும். 

பாதி வெந்ததும் லேசாக தட்டினால் முறுக்கு எண்ணெயில் விழுந்து விடும். பின் மோல்டை எடுத்து விடவும். முறுக்கை திருப்பி உடையாமல் வெந்து இருபுறமும் மொறு மொறுவென எடுக்கவும். சிறு தீயில் வேகவிடவும்.

(மணியாச்சி முறுக்கு அச்சு பாத்திரக் கடைகளில் கிடைக்கும்). இனிப்பு, தேங்காய்ப்பால் சுவையுடன் பிரமாதமாக இருக்கும் முறுக்கு.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories