Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 16, 2022

நிமிடத்தில் இடுப்பு வலி மற்றும் இடுப்பு பிடிப்பு குணமாக


பெண்கள் பலரும் மாதவிடாய் நாட்களிலோ அல்லது வேலையின் பழு காரணமாக இடுப்பு வலி அல்லது இடுப்பு பிடிப்பால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.இந்த இடுப்பு வலி அல்லது இடுப்பு பிடிப்பு நிமிடத்தில் குணமாக இந்த எண்ணெயை தேய்த்தாலே போதும்.வலி முற்றிலும் குணமாகிவிடும்.மற்ற பெயின் கில்லர்ஸை போன்று இதில் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது.

தேவையான பொருட்கள்:!

வேப்பெண்ணெய் : 25 மில்லி

பூண்டு: நான்கு அல்லது ஐந்து பல்.

இந்த இரண்டு பொருளை போதும் உங்கள் இடுப்பு வலியை குணமாக்க.

செய்முறை:

முதலில் நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வானிலில் 25 மில்லி அளவு வேப்ப எண்ணையை ஊத்தி, அதில் இந்த நசுக்கி வைத்த பூண்டை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் சூடு படுத்தவும்.பிறகு சூடு ஏறிய இந்த எண்ணெயை எடுத்து வெதுவெதுப்பான சூட்டிற்கு வரும் வரை ஆறவிடவும்.

வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்தவுடன் இந்த எண்ணெயை விரலில் தொட்டு இடுப்பு வலி மற்றும் இடுப்பு பிடிப்பு உள்ள இடங்களில் வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.இந்த எண்ணெயை தேய்த்த ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்குள் உங்கள் இடுப்பு வலி அல்லது இடுப்பு பிடிப்பு குறைவதை நீங்கள் உணரலாம்.

No comments:

Post a Comment