Thamizhkadal WhatsApp Channel

வரகு கந்தரப்பம்

தேவையானவை:

வரகரிசி - 1½ கப்,
உளுந்து - ¼ கப்,
தேங்காய் - 1 கப்,
வெல்லம் - 1½ கப்,
வெந்தயம் - 1 ஸ்பூன்,
ஏலத்தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் பொரிக்க.

செய்முறை:

வரகரிசி, உளுந்து, வெந்தயம் ஊறவைத்து தேங்காயுடன் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். இதனுடன் வெல்லத்தை சுத்தம் செய்து வடிகட்டி மாவுடன் ஏலத்தூள், வெல்லம் சேர்த்து கரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கரைத்த மாவை சிறு கரண்டியில் எடுத்து எண்ணெயில் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும். (வரகு அரிசிக்கு பதில் எந்த சிறு தானியத்திலும் செய்யலாம்.)
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories