Thamizhkadal WhatsApp Channel

தேங்காய்ப்பால் தேன்குழல்

தேங்காய்ப்பால் தேன்குழல்

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 4 கப்,
பொட்டுக் கடலை - ½ கப்,
உளுந்து - ½ கப்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
துருவிய தேங்காய் - 1 கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

புழுங்கல் அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து கழுவி உப்பு, தேங்காய் துருவலையும் சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக நைசாக அரைக்கவும். வெறும் வாணலியில் உளுந்து, பொட்டுக்கடலை இரண்டையும் தனித்தனியாக லேசாக வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து, அரைத்த புழுங்கல் அரிசியுடன் இந்த பொடியையும் சேர்த்து வெண்ணெய், பெருங்காயத் தூள் கலந்து நன்றாக கலந்து விடவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து பிசையலாம். 

வாணலியில் எண்ணெய் காயவைத்து தேன்குழல் அச்சில் மாவினை சேர்த்து முறுக்குகளாக பிழிந்து எடுக்கலாம். சுவையான மணத்துடன் மொறு மொறுவென தேங்காய்ப்பால் தேன்குழல் தயார். (ஒரு தட்டில் எண்ணெய் தடவி அளவாக பிழிந்து எடுத்து எண்ணெயில் போட ஒன்று போல முறுக்குகள் அழகாக வரும்.)
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories