Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 10, 2022

இனி 2000 ரூபாய் நோட்டுகள் வராது.. காரணம் என்ன?.. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!!

நாடு முழுவதும் கடந்த 2017 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் செல்வந்தர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் என்ன செய்வது என்று தவித்தனர். இதனைத் தொடர்ந்து புதிய 500, 200, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. 

அப்போது பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த அனைவரும் அதனை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டனர். தற்போது அனைத்து புதிய நோட்டுகளும் இயல்பாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். அதனால் பெருமளவு 2000 ரூபாய் நோட்டு பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். இப்படிப்பட்ட நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 2000 ரூபாய் நோட்டுகளே அச்சிடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. 

மேலும் கடந்த 2017, 2018 ஆம் ஆண்டில் 46.690 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும் பின்னர் 2019 ஆம் ஆண்டில் 46.690 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் எண்ணிக்கை குறைந்து தற்போது அச்சிடுவதே இல்லை என தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment