Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 10, 2022

ஆயுசுக்கும் மூட்டு வலி வராமலிருக்க ஒரு ஆரோக்கிய பானம்

அதிகமாக மூட்டுகளில் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் காலை கடன் தவறான முறையில் அமர்ந்து கழிப்பதாலும் மூட்டு வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .மேலும் இந்த வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய வைத்திய முறைகள் இருக்கின்றன .பொதுவாக இது அதிக வயதானவர்களுக்குத்தான் ஏற்படும் .இவதான் அறிகுறிகள் படிக்கட்டு ஏற முடியாமல் அவதி படுத்தல் ,மூட்டுகளில் வலி போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு ஒரு இயற்கை பானம் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் .


முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடைய பச்சை வாடை போகும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எள் கடாயில் கொட்டிய உடன், பட் பட் என வெடிக்க தொடங்கும். அது வரை வறுத்துக் கொள்ள வேண்டும். எள்ளு கருகி விடக்கூடாது. அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலை சூடாக இருக்கும் பாலில் ஊற்றி கலந்து அப்படியே குடித்து விடவேண்டியது தான்.

No comments:

Post a Comment