Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 10, 2022

கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக மருத்துவத் துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவத் துறைச் செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுப்பதற்காக முதல் முறையாக கல்விக் கட்டணங்களை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு பெற்று வருகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளது. இதனைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்த புகார்களை இளநிலை மாணவர்கள் ddugselcom@gmail.com, முதுநிலை மாணவர்கள் ddpgselcom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

கட்டண விவரங்கள் tnmedicalselection.net என்ற இணையத முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment