Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 20, 2022

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1,760 காலி பணியிடகள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,760 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு 10 வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐஓசிஎல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Technician, Graduate / Trade Apprentices எனும் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி மொத்தம் 1760 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வி தகுதி -வயது வரம்பு என்ன?

ஒவ்வொரு பணிக்கு கல்வித்தகுதி என்பது மாறுபடுகிறது. அதன்படி பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு என்ன?


விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 31.12.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். பிடபிள்யூடி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயது தளர்வுகள் உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்பவர்கள் ஆன்லைன் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்www.iocl.comஎனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். இந்த இணையதளத்தில் Careers என்பதை கிளிக் செய்து வேலைக்கான அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய 2023 ஜனவரி மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணClick Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்Click Here

No comments:

Post a Comment