Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 4, 2022

சுவையான கார்த்திகை வடை செய்ய.. ஈஸி ரெசிபி.!

கார்த்திகை ஸ்பெஷல் ரெசிபியில் முக்கியமான ஒன்று கார்த்திகை வடை. என்னதான் ஸ்வீட்ஸ் நிறைய சாப்பிட்டாலும் காரமாக வடை சாப்பிடவில்லை என்றால் உணவில் ஏதோ ஒன்று குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
இந்த கார்த்திகை வடை ரெசிபியை அப்படியே செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் மொத்த வடைகளையும் காலி செய்து விடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

பருப்பு கலவை - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 1 கப்
துவரம் பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 3/4 கப்
பாசிப் பருப்பு- 1/2 கப்

வரமிளகாய் - 5
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - 1/2 அங்குல துண்டு
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

பருப்பு கலவை - செய்முறை :

- உளுத்தம் பருப்பையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- கடலைப் பருப்பையும் துவரம் பருப்பையும் ஒன்றாக ஊற வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

- அரைக்கும் பொழுது முதலில் உளுத்தம் பருப்பை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு கடலைப் பருப்பையும் துவரம் பருப்பையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இறுதியாக பாசிப்பருப்புடன் 2 வரமிளகாய், சீரகம் 1/2 டீஸ்பூன், மிளகு 1/2 டீஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் பருப்பு கலவை தயார்.

குறிப்பு : இந்த பருப்பு கலவை சிறிது கரகரப்பாக இருக்க வேண்டும். நைஸாக அரைக்க கூடாது.

கார்த்திகை வடை - செய்முறை :

- பருப்புக் கலவையுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

- இறுதியாக வாழை இலையில் எண்ணெய் தடவி வடைய தட்டி வானலியில் எண்ணெயை காய வைத்து சுட்டு எடுத்தால் சுவையான கார்த்திகை வடை தயார்!

No comments:

Post a Comment