JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

2023ம் ஆண்டு ஜனவரி 1 முதல், 2025, டிச.,31 வரை பேட்டரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியில் நூறு சதவீதம் விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் வாகனங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது.
அதிலும் அத்தகைய வாகனங்களில் காற்று மாசும் ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனைப்போக்க பேட்டரி வாகனங்கள் தற்போது சந்தையில் அறிமுகமாகி பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது. இதில் பெட்ரோல், டீசலுக்கு ஆகும் செலவை விட குறைவாகவே செலவாகிறது எனக் கூறப்படுகிறது.
இதனால், பேட்டரி வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்திலும் பேட்டரி வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஜன.,1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment