Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 18, 2023

M என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்


ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று.
அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன. M என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

M என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம்.

M என்ற எழுத்து என்பது விரிவான வளர்ச்சியைக் கொடுக்க கூடிய ஒரு எழுத்தாகும். அறிவான பேச்சு மற்றும் அறிவாக சிந்திப்பவர்களை பார்த்தால் இவர்களுக்கு பிடிக்கும். இவர்கள் இவர்கள் இயற்கையாகவே அறிவுத்திறனை பெற்றிருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் இருக்கும் திட்டத்தை செயல்படுத்த எப்பொழுதுமே முனைவார்கள். இவர்கள் கொஞ்சம் சுயநலமில்லாத தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு வியாபாரம், ஒரு தொழில் என்று வந்துவிட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார்கள். எந்த தோல்விக்கும் துவளாமல் மீண்டும் எழுந்து வந்து வெற்றியை நோக்கி பயணிப்பார்கள். ஒரு தொழிலை ஆரம்பித்தாலோ அல்லது நண்பர்களை தேர்ந்தெடுப்பதிலோ அவர்கள் நெடுநாளைய தொடர்பை வலுப்படுத்த திட்டமிடுவார்கள்.

இவர்கள் தாய்ப்பாசம், அன்பு மற்றும் கருணை மிக்கவர்கள். நண்பர்கள் மற்றும் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள். தலைமைப் பண்பு கொண்டவர்கள். ஒரு பொறுப்பை தலைமை ஏற்று நடத்தும் திறன் பெற்றவர்கள். பிறர் சொல்லும் புத்திமதிகளையும் மதித்து கேட்டுக் கொள்வார்கள். தன்னை சுற்றி இருக்கும் பாசிடிவ் எண்ணங்களை ஈர்த்துக் கொள்வார்கள். குடும்பத்தில் பொறுப்பானவர்கள். இவர்கள் குடும்ப உறவுகளை வழி நடத்தி கொண்டு செல்லும் தகுதி படைத்தவர்கள். முன்னோர்கள் காட்டிய வழியில் உண்மையாக இருந்து கடவுளிடம் பக்தி செலுத்துவார்கள். பாரம்பரிய வழியை பின்பற்றி நடப்பார்கள். இவர்கள் நாகரிகமான உலகத்தையும் அனுசரித்து தங்களது பழமையை விடாமல் தொடர்ந்து பின்பற்றுவார்கள். இவர்கள் நடுநிலைமையாக நடந்துக்கொள்வார்கள்.

கடின உழைப்பை நம்பக்கூடியவர்கள். சலிக்காமல் கடைசி வரைக்கும் உழைக்கும் எண்ணம் உடையவர்கள். திட்டமிடுதலில் வல்லவர்கள். வியாபாரம், தொழிலில் இருப்பவர்கள் நன்றாக திட்டமிட்டு ஒரு செயலை செய்வார்கள். இவர்கள் தான் கீ பெர்ச்னாக இருந்து அனைவரையும் வழி நடத்தி செல்லும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே இவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் வலிமை மற்றும் மன வலிமை உடையவர்களாக இருப்பார்கள்.


அறிவுத்திறன் மிக்கவர்கள்.

சுயநலமில்லாதவர்கள்.

நீண்டகால திட்டமிடுதலை செய்வார்கள்.

சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டவர்கள்.

பாரம்பரிய நெறிமுறைகளை பின்பற்றுவார்கள்.

அனைவரையும் அனுசரித்து வழிநடத்தக்கூடிய தலைமையில் இருப்பார்கள்.

நல்ல உடல்நலம் மற்றும் மனநலம் மிக்கவர்கள்.

M என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் பலவீன்கள்:

குறுகிய கால வியாபாரம் மற்றும் திட்டமிடுதலை பற்றி யோசிக்க மாட்டார்கள். இவர்களுக்கு எதிர்மறையாக யாராவது செயல்பட்டால் இவர்கள் கோவப்படுவார்கள். இவர்களுக்கு இருக்கும் பொறுமை சரியாக புரிந்து கொள்ளப்படாமல் மிகவும் பிடிவாதகாரராகவும், சோம்பேறியாகவும் மற்றவர்களின் பார்வையில் புலப்படும். இது இவர்களுக்கான வாய்ப்புகளை பாதிக்கும். அதுமட்டுமில்லாமல், நடைமுறைகள் சிந்திப்பார்கள் என்பதால், எல்லா இடங்களிலும் மிகவும் லாஜிக்கலாக யோசித்து, முக்கியமான விஷயங்களை தவற விட்டு விடுவார்கள்.


குறுகிய கால வியாபாரம் அல்லது தொழிலை பற்றி யோசிக்க மாட்டார்கள்.

இவர்களுக்கு எதிராக யாராவது செயல்பட்டால் கோவப்படுவார்கள்.

தீவிரமாக ஒரு விஷயத்தை கடைபிடிப்பார்கள், அதில் இருக்கும் நன்மை தீமைகள் கண்களுக்குத் தெரியாது

குறிப்பிட்ட எல்லைக்கு மேல் விரிவு படுத்திக் கொள்ள நிறைய யோசிப்பார்கள்

எண் கணித ஜோதிடத்தில் ராகுவின் ஆதிக்கம் பெற்ற M எழுத்து

எண் கணித ஜோதிடத்தில் ஜாதகத்தில் M என்ற எழுத்து 4 ஆம் எண்ணைக் குறிக்கும். இது விசுவாசம், நம்பகத்தன்மை மற்றும் பக்தி ஆகியவற்றை குறிக்கும் எண் ஆகும். அதே போல், எண் நான்கு என்பது ராகுவைக் குறிக்கும் கிரகமாகும். எனவே ராகுவின் குணங்களும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

No comments:

Post a Comment