JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 8,000 தனியார் பள்ளிகளில், 83 ஆயிரம் மாணவர்களை சேர்க்க, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.மத்திய, மாநில அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், அரசின் சார்பில், கல்வி கட்டணமின்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் நாளை முதல் மே, 18 வரை ஆன்லைன் வழியே, https://tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம், மே, 21 மாலை, 5:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், மே, 23ல் குலுக்கல் நடத்தப்படும்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம், மே, 24ல் வெளியிடப்படும். மே, 29க்குள் பள்ளிகளில் உரிய சான்றிதழ் அளித்து, மாணவர்களை சேர்க்க வேண்டும்.
இந்த திட்டத்தில் மொத்தம், 8,000 மெட்ரிக் பள்ளிகளில், 83 ஆயிரம் பேரை சேர்க்க, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்து உள்ளது.
No comments:
Post a Comment