Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் திட்டப் பொறியாளர், ட்ரெய்னி இஞ்ஜினியர் ஆகிய இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
திட்டப் பொறியாளர் (Project Engineer)
ட்ரெய்னி இஞ்ஜினியர் (Trainee Engineer-I (Computer Science))
மொத்த பணியிடங்கள் - 23
கல்வித் தகுதி:
எலக்ட்ரானிக்ஸ்,மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மனிதவள மேம்பாடு படித்த திட்ட அலுவலர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுகளில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விவரம்:திட்ட பொறியாளர் / அதிகாரி - ரூ.40,000 (2-ம் ஆண்டு- ரூ.45,000/ 3-ஆம் ஆண்டு -ரிஊ.50,000/ 4-ம் ஆண்டு ரூ.55,000 )
பயிற்சி பொறியாளர் - ரூ30,000 (2-ம் ஆண்டு -ரூ.35,00 / 3-ம் ஆண்டு -ரூ.40,000)
திட்ட பொறியாளர் பணி நான்கு ஆண்டுகளும், பயிற்சி இஞ்ஜினிய பணி மூன்று ஆண்டுகளும் ஒப்பதம் அடிப்படையிலானது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்போது 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டம் பெற்றதற்கான சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக திட்டப் பொறியாளார் ரூ.472/- (ஜி.எஸ்.டி. தொகையுடன்) விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி பொறியாளர் ரூ.177 ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்த வேண்டும், மேலும், பட்டியலின பிரிவினர் / பொதுப்பணி துறையினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழு விவரத்திற்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=25.07.2023%20-%20PE%20TE%20WEB%20AD%202023%20-%20ENGLISH.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.08.2023
No comments:
Post a Comment