Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 2, 2023

108 ஆம்புலன்ஸ் -உதவியாளர் மற்றும் ஓட்டுனர் வேலை

108 Ambulance சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையாகும். தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் EMRI GREEN HEALTH SERVICES நிறுவனத்துடன் அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது.

ஓட்டுனருக்கான அடிப்படை தகுதிகள்:

Qualification: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி

Age: 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Gender:ஆண் மற்றும் பெண்

Height: 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஓட்டுனருக்கான தகுதிகள்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

Salary details:ரூ.15235/- (மொத்த ஊதியம்).

மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்:

Qualification: B Sc நர்சிங், DGNM அல்லது, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்), Life Science Graduates (B.Sc. Zoology, Botany, Bio Chemistry, Microbiology, Biotechnology)

Age: 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

பாலினம்:

ஆண் மற்றும் பெண்.

Salary details: ரூ.15435/- (மொத்த ஊதியம்)

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் கீழ்வருமாறு:

Date : 04/11/2023 - சனிக்கிழமை

Time : காலை 10 முதல் 2 மணி வரை

Place : கலையரங்கம், அரசு மருத்துவக் கல்லூரி வளாகம்,

திருவண்ணாமலை.

No comments:

Post a Comment