Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழக அரசனது Pongal Gift மற்றும் வேட்டி சேலையுடன் ரூபாய் 1000 ரூபாய் ரொக்க தொகையும் பரிசாக ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் (2025) 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக அரசால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகையான 1000 ரூபாய் இணைந்து 2000 ரூபாயாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்களால் இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment