Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 15, 2025

விதிகளுக்கு புறம்பாக பணி இடமாறுதல் - ஆசிரியர் கூட்டணி கண்டனம் ஆசிரியர் பயிற்சி திட்டங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் காலிப்பணியிடங்களில் அரசியல் அழுத்தம காரணமாக விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் வழங்கியதற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித் தம்பி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தற்போதுள்ள காலிப்பணியிடங்களில் அரசியல் அழுத்தம் என்று கூறி எம் லிஸ்ட் பெயரில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்விற்கு புறம்பாக மாறுதல் அளிப்பதை கண்டித்தும், தொடக்கக்கல்வி துறையில் 12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாததை கண்டித்தும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி சில ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசியர் பதவி காலியாக உள்ளது.

இதனால் பள்ளிகளை நிர்வகிப்பது சவாலான விஷயமாக உள்ளது. தொகுப்பூதிய மதிப்பூதிய நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.

சமூக நலத்துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழு மூலம் தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சீருடைகள் குறைவான எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்து மீண்டும் வழங்க வேண்டும்.

தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விதிகளுக்கு புறம்பாக அரசாணைகளுக்கு முரணாக தர ஊதியம் ரூ.5400 உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கை தடைகளால் ஆசிரியர்கள் ஓய்வூதியப் பலன்களை பெற முடியாமல் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட உயர் அலுவலர்களை சந்தித்து கோரிக்கை வைப்பது எனவும் கோரிக்கைகள் தீர்க்கப்படாத சூழலில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News