Join THAMIZHKADAL WhatsApp Groups

ஆதார் விவரங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவர்கள் உடனடியாக புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தி புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கூறியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதிக்குப் பின்னரும் ஆதார் விவரங்களை புதுப்பித்துக்கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment