Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 26, 2025

தமிழ்நாடு வேளாண் பல்கலை சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக வேளாண் பல்கலை மற்றும் அண்ணா பல்கலையில் (வேளாண் பிரிவு) இளமறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை; இந்த கல்வியாண்டில் தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும், மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 6,921 (அரசாங்க கல்லூரிகளுக்கு 2,516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு 4,405 இடங்களும் - 6621 இடங்கள்) மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் 340 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு http://tnau.ucanapply.com என்ற இணையத்தில் கடந்த மே 9ம் தேதி முதல் பெறப்பட்டு வந்தன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாக ஜூன் 8ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாக 16.06.2025 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. மீண்டும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும் போது பணம் செலுத்த முடியாமல் உள்ள விண்ணப்பதார்களுக்கு ஜூன் 16 முதல் ஜூன் 20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 37,007 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 29,349 பேர் தரவரிசைக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 18,443 மாணவிகளும், 9,370 மாணவர்களும் அடங்குவர். பொது இடஒதுக்கீட்டிற்கான (Academic Stream) தரவரிசை பட்டியலில் 27,823 விண்ணப்பதார்களும் மற்றும் தொழில்முறைக் கல்வி இடஒதுக்கீட்டில் (Vocational Stream) 1266 விண்ணப்பதாரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

தரவரிசைப்பட்டியல்

தரவரிசை பட்டியலில் விழுப்புரத்தைச் சேர்ந்த திவ்யா என்பவர் முதலிடத்தையும், கடலூரைச் சேர்ந்த ஹம்தா மெஹதப் 2வது இடத்தையும், அதே ஊரைச் சேர்ந்த இலக்கியா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News