JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற் பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரி யம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்டபடி தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது செட் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு யுஜிசி சார்பிலும் செட் தகுதித் தேர்வு அந்தந்த மாநில அளவிலும் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப் பட்ட 'செட்' தகுதித்தேர்வு முடிவு ஏறத்தாழ 3 மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. செட் தேர்வு முடிவு வந் தவுடன் அடுத்தகட்டமாக உதவி பேராசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித் ததவர்கள் அதற்காக முழு மூச்சில் தயாராகி வரும் நிலையில், செட் தேர்வுக்கான முடிவு அறிவிக்கப்படாமல் இருப்பது அவர்களை சோர்வடையச் செய்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “செட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு நிறைவடையும் தருவாயில் உள் ளது. வழக்கு முடிவுக்கு வந்தவுடன் செட் தகுதித்தேர்வு முடிவு வெளி யிடப்பட்டு அதைத்தொடர்ந்து உடனடியாக உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும்" என்றார்.
அந்த அதிகாரி மேலும் கூறும் போது, "முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,915 இடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில் தேர்வு நடத்தப்படும் என வருடாந்திர தேர்வு அட்டவணை யில் அறிவிக்கப்பட்டது. அதன் படியே முதுகலை ஆசிரியர் தேர்வுக் கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். தேர்வு நடத்து வதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரு கின்றன. அரசு மேல்நிலைப்பள்ளி களில் முதுகலை ஆசிரியர் பணிக்கு கூடுதல் காலியிடங்கள் கேட்கப் பட்டுள்ளன. எனவே, காலிப்பணி யிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்வு புதிய பாடத்திட் டத்தின்படி நடத்தப்படும்" என்றார்.
No comments:
Post a Comment