Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 24, 2025

தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்



தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதற்கான விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tamilvalarchithurai.tn.gov.in/awards https://awards.tn.gov.in www.tamilvalarchithurai.tn.gov.in இத்தகவலை தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றுபவா்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2026 ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, நிகழாண்டுக்கான (2025) மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, முத்தமிழறிஞா் கலைஞா் விருது, பெருந்தலைவா் காமராஜா் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, பேரறிஞா் அண்ணா விருது, தமிழ்த்தாய் விருது, இலக்கிய மாமணி விருது உள்ளிட்ட 73 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழறிஞா்கள் மேலே உள்ள இணையதளத்தில்

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து 'தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600008' என்ற முகவரிக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.

தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment