
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
விண்ணப்பிக்க
» முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தேசிய அளவில் முன்னிலையில் உள்ள ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வில் (Common Admission Test-CAT) தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் நவம்பர் 30-ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்துகிறது. காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வு நடைபெறும்.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ல் தொடங்கி செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலன்கருதி விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://iimcat.ac.in எனும் வலைதளத்தில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.1,300, மற்ற தேர்வர்கள் ரூ.2,600 செலுத்த வேண்டும். தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.தேர்வு முடிவுகள் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.









No comments:
Post a Comment