ஜே.இ.இ மெயின் 2026 பி.இ/பி.டெக் தாளில் முதல் 2,50,000 இடங்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வுக்குத் தகுதி பெறுவர். இந்த 2.5 லட்சம் மாணவர்களில், 27% OBC-NCL, 15% SC, 10% GEN-EWS, மற்றும் 7.5% ST பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/12/06/jee-advanced-2026-2025-12-06-21-21-46.jpg)
ஜே.இ.இ அட்வான்ஸ்ட் 2026: முதல் 2.5 லட்சம் தேர்வர்கள் மட்டுமே தகுதி - ஐ.ஐ.டி ரூர்க்கி அறிவிப்பு
ஐ.ஐ.டி ரூர்க்கி (IIT Roorkee), ஜே.இ.இ அட்வான்ஸ்ட் 2026 தேர்வை நடத்தும் நிறுவனமாக, அடுத்த ஆண்டு தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான விரிவான தகுதி விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, ஜே.இ.இ மெயின் 2026 பி.இ/பி.டெக் தாளில், அனைத்து பிரிவுகளிலும் முதல் 2,50,000 இடங்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த தேர்வு ஒரு நிலையான வகை வாரியான விநியோகத்தின் (category-wise distribution) அடிப்படையில் நடைபெறும். இந்நிறுவனம், வயது வரம்பு, முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் 12 ஆம் வகுப்பு தகுதி தொடர்பான நிபந்தனைகளையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜே.இ.இ மெயின் 2026: முதல் 2.5 லட்சம் தகுதி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி
விதிமுறை A1-ன் கீழ், விண்ணப்பதாரர்கள் ஜே.இ.இ மெயின் 2026 (BE/BTech தாள்) தேர்வில் முதல் 2,50,000 தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வுக்குத் தகுதி பெறுவது, பின்வரும் கண்டிப்பான வகை வாரியான சதவிகிதப் பிரிவினையைப் பின்பற்றி நடைபெறும்:
பொது-EWS: 10%
ஓ.பி.சி-NCL: 27%
எஸ்.சி: 15%
எஸ்.டி: 7.5%
ஓபன்: 40.5%
மேலும், இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும், PwD (மாற்றுத்திறனாளி) மாணவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு (Horizontal Reservation) உண்டு. 'சம மதிப்பெண்கள்' (tied ranks) காரணமாக, மொத்த எண்ணிக்கை 2.5 லட்சத்தை விட சற்றே அதிகமாக இருக்கக்கூடும் என்றும் ஐ.ஐ.டி ரூர்க்கி தெளிவுபடுத்தியுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/32188e57-3b0.png)
முக்கிய குறிப்பு: OCI/PIO (I) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், OPEN-PwD பிரிவைத் தவிர, வேறு எந்த இட ஒதுக்கீடு பலன்களுக்கும் தகுதியற்றவர்கள். அவர்கள் கண்டிப்பாக ஓபம் பட்டியலில் மட்டுமே தகுதி பெற வேண்டும்.
ஜே.இ.இ அட்வான்ஸ்ட் 2026-க்கான வயது வரம்பு
தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 1, 2001 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் PwD பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. அதாவது, அவர்கள் அக்டோபர் 1, 1996 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும்.
ஜே.இ.இ அட்வான்ஸ்ட் முயற்சி வரம்பு
இந்தத் தேர்வுக்கு ஒரு மாணவர் தொடர்ச்சியான 2 ஆண்டுகளில் மட்டுமே (Only twice in two consecutive years) தோற்றிருக்க முடியும் என்ற நீண்ட கால விதி தொடர்கிறது. இதன்படி, ஒரு மாணவர் 2025-க்கு முன் இந்தத் தேர்வில் தோன்றி இருந்தால், அவர் 2026-ல் தேர்வு எழுத தகுதியற்றவர் ஆவார். எனவே, மாணவர்கள் தங்கள் 12-ம் வகுப்பு மற்றும் ஜே.இ.இ மெயின் கால அட்டவணையை கவனமாகத் திட்டமிட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், 2025-ம் ஆண்டிலோ அல்லது 2026 ஆம் ஆண்டிலோ முதன்முறையாக 12 ஆம் வகுப்பு (அல்லது அதற்கு சமமான) தேர்வில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய கட்டாயப் பாடங்களுடன் தோன்றி இருக்க வேண்டும். இந்த நிபந்தனை, ஆர்வலர்களை நீக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளது.
தேர்வுகள் நடத்தப்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு கல்வி வாரியத்தின் முடிவு அறிவிக்கப்பட்டால், அந்த ஆண்டு விண்ணப்பதாரரின் முதல் 'முயற்சியாக' கருதப்படும். முடிவு நிறுத்தி வைக்கப்பட்டாலும் (withheld result) அது அந்த ஆண்டின் முயற்சியாக கருதப்படும். 2024-ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னரோ 12 ஆம் வகுப்பு எழுதிய மாணவர்கள், எந்தப் பாட கலவை அல்லது எத்தனை முயற்சிகள் எடுத்திருந்தாலும், தகுதியற்றவர்கள்.
ஒரு கல்வி வாரியம் 2023–24ம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 18, 2024 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ வெளியிட்டிருந்தால், அந்த வாரியத்தில் 2024-ல் தேர்வு எழுதிய மாணவர்கள், மற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள். இருப்பினும், முடிவு இந்த தேதிக்கு முன் வெளியிடப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மாணவரின் முடிவு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர்.



No comments:
Post a Comment