TNTET 2025 - உண்மைத்தன்மை அறியும் கருத்துருக்கள் சமர்ப்பித்தல் - New Proceedings

2025 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை அறியும் கருத்துருக்கள் சமர்ப்பித்தல் - CEO Proceedings

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 இன் உண்மைத்தன்மை அறிய பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்களில் கருத்துருக்கள் பெறப்பட்டு வருகின்றன. பெறப்படுகிற பெரும்பாலும் குறைபாடுகளுடன் பெறப்படுவதால் உரிய ஆவணங்கள் பெற்ற பின்னர் நடவடிக்கை மேற்கொள்வதால் கலதாமதம் தவிர்த்திட கீழ்க்கண்ட ஆவணங்கள் இரண்டு பிரதிகளாக இணைத்து கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

01. தலைமை ஆசிரியரின் கடிதம்.

02.தனியரின் உறுதிமொழி சான்று.

03.ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை கோரும் படிவம்.

04.ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்.

05.ஆசிரியர் தகுதித்தேர்வு நுழைவுச்சீட்டு நகல்(இருப்பின்).

06.தனியரின் பணிநியமன ஆணை நகல்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலரிடமிருந்து தற்போது பெறப்படவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் பெறப்பட்டவுடன் இவ்வலுவலகத்திலிருந்து தகவல் அளிக்கப்பட்ட பின்னர் 2025 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை அறியும் கருத்துருக்கள் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories