🌹காரணங்களுக்காகவோ
தேவைகளுக்காகவோ
வருவதில்லை ஒருவர் மீதான அன்பு..!
இன்பமோ துன்பமோ
நமக்காக நம்மோடு இறுதிவரை இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வருவதே உண்மையான அன்பாகும்.!
🌹🌹வயதாகும் போது கூட,
ஆடம்பர வாழ்க்கை வாழலாம்...ஆனால்,ஆசைப்பட்ட வாழ்க்கையை அந்தந்த வயதில் மட்டுமே வாழ முடியும்.!!
🌹🌹🌹அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛱️⛱️நான் முதல்வன் திட்டத்தில் படித்த மாணவர் முதலிடம்:-
👉நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன்.UPSC தேர்வு தரவரிசையில்(தமிழ்நாட்டில்) முதலிடம்.
👉அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடம் பெற்றுள்ளார்.
⛱️⛱️உச்ச நீதிமன்றத்தில்
TET வழக்குகள் ஏப்ரல் 28ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளது.
⛱️⛱️நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு.
👉மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று 26.04.2026 ஹால் டிக்கெட் வெளியீடு.
👉மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
⛱️⛱️பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர மே 23 க்குள் விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு! (பத்திரிக்கை செய்தி)
⛱️⛱️AI பற்றிய 3 புதிய படிப்புகள் - சென்னை IIT ஸ்வயம் பிளஸ் தளத்தில் அறிமுகம்
⛱️⛱️சென்னை பல்கலை.யில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: இளங்கலை படிப்பில் சேர மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்.
⛱️⛱️தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு
⛱️⛱️பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
⛱️⛱️ஓட்டுப்பதிவுக்காக பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி சரிவர இல்லாததால் வீட்டிற்கு செல்வதற்கு சிரமப்பட்டனர்.
⛱️⛱️ஜூன் மாதத்தில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!(பத்திரிகை செய்தி)
⛱️⛱️அரசு ஆணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளின் படி இக் கல்வியாண்டில் பணிநீட்டிப்பில் (ReEmployment) இருந்த அனைத்து ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைவரும் இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளான நேற்று 25.04.2026 (சனிக்கிழமை) பிற்பகல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
⛱️⛱️மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதங்களில் திருத்தம் - 01.01.2026 முதல் அமலுக்கு வருகிறது.
⛱️⛱️RTE சேர்க்கை 2026–2027 தொடங்கியது!
👉தனியார் பள்ளிகளில் 25% இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
👉LKG / 1ஆம் வகுப்பு சேர்க்கை
👉ஆன்லைன் விண்ணப்ப சேவை
👉முழு வழிகாட்டுதல்
👉சேவை கட்டணம்: ₹300 மட்டும்
👉தேவையான ஆவணங்களுடன் உடனே பதிவு செய்யுங்கள்.
⛱️⛱️தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக, ஒரு அரசு அலுவலகத்தை ஆய்வு செய்து தங்களுக்கு தேவையான ஆவணங்களை நகல் எடுக்கும் போது தங்களுடைய உதவிக்காக இரண்டு நபர்களை ஆய்வின் போது உடன் அழைத்துச் செல்லலாம். தமிழ்நாடு தகவல் ஆணைய வழக்கின் தீர்ப்பு.
⛱️⛱️மே முதல் வாரம் தமிழகத்தில் வெப்பச் சலனம் மழை ஆரம்பிக்கும் மாலை/இரவு நேரங்களில் பெய்யும்.
மே இறுதியில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கும்.
⛱️⛱️ஜனநாயகத்தில் உரிமை உண்டு"
"ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் எங்கு இருக்க வேண்டும், எங்கிருந்து வெளியேற வேண்டும் என்று முடிவெடுக்க உரிமை உண்டு. கட்சி சரியான திசையில் செயல்பட்டிருந்தால், அவர்கள் கட்சியைவிட்டு விலகியிருக்க மாட்டார்கள்"
- ஆம் ஆத்மியின் 7 MPக்கள், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறித்து அண்ணா ஹசாரே கருத்து
⛱️⛱️மே.வங்கத்தில் பாஜக-விற்கான பேராதரவை கண்டு திரிணாமுல் காங்., நிலைகுலைந்துள்ளது - பிரதமர் மோடி
⛱️⛱️இணைய சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்திய சீனா.!
⛱️⛱️75,064 மையங்களில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாததால் தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு"
⛱️⛱️சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புள்ளிகள் வழங்கும் முறையில் மாற்றம்!
அதிரடி மாற்றம்
சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புள்ளிகள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்தது உலக பேட்மிண்டன் சம்மேளனம்
தற்போது நடைமுறையில் உள்ள 21 புள்ளிகள் (21x3 - Best of three) முறை நீக்கப்பட்டு,
15 புள்ளிகள் (15x3- Best of three)
கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு. இந்த புதிய விதி 2027 ஜனவரி 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.
⛱️⛱️"என் பையன் விஜய்க்கு ஓட்டு போடலேன்னா சாப்பிட மாட்டேன்.. படிக்க மாட்டேனு சொல்லி வற்புறுத்துனான். விஜய்க்குதான் போட்டேனு பொய் சொல்லி சமாதானம் பண்ணவே படாத பாடு பட்டுட்டேன். விஜய் இந்த மாதிரி தான் குழந்தைகள ஓட்டு வாங்குற கருவியா யூஸ் பண்ணியிருக்காரு. தமிழ்நாட்டுல இப்படி எத்தனை பெற்றோர்கள் பாதிக்கப்பட்டாங்கனு தெரில்ல. உடனே விஜய் பேசுற அந்த வீடியோவ தூக்கணும். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கேன். நடவடிக்கை இல்லன்னா கோர்ட்டுக்கு போவேன்"
-கோவை விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் காட்டம்
⛱️⛱️தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தெலங்கானா ராஷ்டிரிய சேனா என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில், "ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்" என குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ள BRS கட்சி
BRS-ன் முன்னாள் பெயரான தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் (TRS) சாயலிலேயே, தெலங்கானா ராஷ்டிரிய சேனா (TRS) என்று தன் புதிய கட்சிக்கு கவிதா பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது
⛱️⛱️கேரள மக்களுக்கு அண்மையில் கிடைத்த முக்கிய செய்தி ஒன்றை பார்ப்போம்.
கேரளத்தில் கடந்த ஓரிரு நாட்களாக சூரிய ஒளியில் புற ஊதா கதிர்வீச்சு அதிகரிப்பு.
தோல்,கண்களை பாதிக்கும் என்பதால் பாதுகாப்புடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேரள மக்களுக்கு எச்சரிக்கை ⛱️⛱️கோடை வெயில் தாக்கம் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து 50% சரிவு. அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு.
வெயிலின் தாக்கம் நீடித்தால் காய்கறிகள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் எச்சரிக்கை ⛱️⛱️தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு.
ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,200க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,13,600க்கும் விற்பனை
⛱️⛱️அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்
சென்னையின் 300 முக்கிய சாலைகளில் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகளை அமைக்க மாநகராட்சி திட்டம்
இந்த வழிகாட்டி பலகைகளில் எழுத்துக்களை விட எளிதில் புரியக்கூடிய வகையில் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்
இதன் மூலம் தமிழ் தெரியாதவர்கள் அல்லது வெளிமாநிலத்தவர்கள் கூட எளிதாக சாலைகளை அறிந்துகொள்ள முடியும் என கூறப்படுகிறது
⛱️⛱️மரண தண்டனைகளை நிறைவேற்ற "துப்பாக்கியால் சுடும்" முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தது அமெரிக்க அரசு.
⛱️⛱️முதன்முறையாக வருகின்ற மே மாதம் முதல் டெல்லி யமுனை நதியில் சொகுசு கப்பல் சேவை தொடங்குகிறது
⛱️⛱️தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கான தடையை 2027 ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
⛱️⛱️தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவுதான் நடந்துள்ளது. சதவீதம் எதுவும் மாறவில்லை. பதிவு செய்யப்படாமல் எண்ணிக்கையாக மட்டுமே இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் SIR மூலம் நீக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் வாக்குப்பதிவு போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. அது உண்மை இல்லை. புதிதாக 25 லட்சம் வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். அவ்வளவுதான்''
-திருமாவளவன்
⛱️⛱️மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 1855 என்ற இலவச எண்ணை அறிவித்தது மத்திய அரசு.
ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் இந்த சேவை கிடைக்கும் என மத்திய அரசு தெரிவிப்பு
⛱️⛱️தனக்குப் புற்றுநோய் பாதிப்பு இருந்ததை உறுதி செய்த நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு, 2024ம் ஆண்டில் ஆரம்பக்கட்ட புற்றுநோய் பாதிப்பு கண்டறியப் பட்டதாகவும், அதற்கான சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்து அவர் குணமடைந்ததாகவும் அறிவிப்பு.
கடவுள் புண்ணியத்தில் அந்தப் பிரச்சனை நீங்கி, தற்போது மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக நெதன்யாகு X தளத்தில் பதிவு
⛱️⛱️WhatsApp-ல் அறிமுகம் ஆன புதிய வசதி
WhatsApp UPI-ல் மொபைல் போன் ரீசார்ஜ்களை செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியது மெட்டா. Airtel, Vi, Jio ரீசார்ஜ்களை செய்யலாம்.
BSNL பயனர்களுக்கு விரைவில் இந்த வசதி அறிமுகம் ஆகும்.
⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️
🌹🌹பேடிஎம் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்.பி.ஐ!
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வங்கி உரிமத்தை ரத்து செய்வதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. விதிமுறை மீறல்கள் காரணமாக அந்த வங்கியின் மீது வணிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த இறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமம் ரத்து செய்யப்பட்ட போதிலும், வங்கி தற்போது செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் செயல்பாடுகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வங்கியின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வைத்துள்ள டெபாசிட் தொகைகளைத் திரும்பப் பெறுவதற்கும், வங்கிச் செய்தியாளர்கள் மூலம் கடன் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய டெபாசிட்களை அந்த வங்கியால் இனி ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
சீனாவின் ஆன்ட் குரூப் மற்றும் ஜப்பானின் சாஃப்ட் பேங்க் ஆகிய நிறுவனங்களை ஒருகாலத்தில் முதலீட்டாளர்களாகக் கொண்டிருந்த 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்'ஆதரவுடன், 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேடிஎம் இந்த வரையறுக்கப்பட்ட வங்கி உரிமத்தைப் பெற்றது. இந்த உரிமத்தின்படி சிறிய அளவிலான டெபாசிட்களைப் பெற மட்டுமே அனுமதி உண்டு, ஆனால் கடன் வழங்க அனுமதி இல்லை.
முன்னதாக, வாடிக்கையாளர் சரிபார்ப்பு, நிதி பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு தொடர்பான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால், 2024 ஜனவரி மாதம் புதிய டெபாசிட்களைப் பெறுவதை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ள ரிசர்வ் வங்கி, வங்கியை முழுமையாக மூடுவதற்கான விண்ணப்பத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்
&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
No comments:
Post a Comment