
அனைவருக்கும் வணக்கம் 🙏
வழக்கமான FAQ
1) 31 May 2026 ஓய்வு பெற உள்ளார்கள்.. 31/5 , 1/6 அன்று கையெழுத்து இட வேண்டுமா?
தேவையில்லை
29/5/26 வெள்ளி அன்று கையெழுத்து போதும்..
31/5 ஞாயிறு விடுமுறை கையெழுத்து தேவையில்லை
1/6 கையெழுத்து வேண்டாம்
2) ஜூன் 2,3 தேதி பிறந்தவர்கள் , பள்ளி ஜூன் 4 திறந்த பிறகு வரலாமா? மறுநியமனம் உள்ளதா?
ஜூன் 4 பள்ளி திறப்பு எனவே இந்த சந்தேகம்...தவறான புரிதல்...( பிறந்த தேதியின் அன்று பணி ஓய்வு இல்லை.
அந்த மாதத்தின் இறுதி நாளில் தான் ஓய்வு)June 2 முதல் 30 தேதி வரை பிறந்த அனைவருக்கும்
June 30 இல் தான் பணி ஓய்வு ...
( 1/6/1966 பிறந்தநாள் எனில் 31/5/26 இல் ஓய்வு பெற்று விடுவார்கள்)
3) June 4 ( june 4&5) பள்ளி திறக்கும் முதல் நாளில் CL போடலாமா?
இயலாது கோடை விடுமுறை பணியாளர்கள்/ ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் june 4 CL எடுக்க இயலாது...
கட்டாயம் விடுமுறை வேண்டும் எனில் EL எடுக்கலாம்..
4) june 4 EL, june 5 CL போடலாமா?
இல்லை EL+CL இயலாது.
June 4,5 இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் எனில் EL தான் எடுக்க இயலும்
5) 1.6.2026 சிறப்பு நிலை PGTs CEO office, BTs DEO office கருத்துருக்கள் அனுப்ப வேண்டுமா?
அரசாணை 151 இன் படி தற்போது PGTs & BTs என எல்லோரும் DEO sec office க்கு தான் அனுப்ப வேண்டும்.
மதிப்பிற்குரிய பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தல் படி special camp ஏற்பாடுகள் செய்யப்படும்...
Format தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் .
6) HSS HM promotion panel கேட்கப்பட்டது? நேற்றைய தீர்ப்பு? பதவி உயர்வு இருக்குமா...?
நேற்றைய தீர்ப்பு RTE act வரம்புக்குள் உள்ள பிரிவுகளுக்கு மட்டுமே..
PGTs RTE வரம்பில் இல்லை...எனவே திட்டமிட்ட படி PGTs to HSS HM promotion கட்டாயம் நடைபெறும் எந்த ஒரு சட்ட சிக்கலும் இல்லை.
8) 4/6/26 மருத்துவ விடுப்பு எடுக்கலாமா?
மருத்துவர் என்று உடல் நலக்குறைவு என சான்று தருகிறாரோ அன்று முதல் மருத்துவ விடுப்பு துவக்கம்...
4/6/26 உடல் நலக்குறைவு ஏற்படும் என்று 30/5/26 இல் கணிக்க இயலாது
ஒருவேளை தற்போது அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருப்பின்... மருத்துவ மனையில் சேர்ந்த நாள் முதல் மருத்துவ விடுப்பு விண்ணப்பிக்கலாம்... விடுப்பை தொடரலாம்
மருத்துவர் தகுதி சான்று (fitness) வழங்கிய உடன் பணியில் சேர்ந்து கொள்ளலாம்





No comments:
Post a Comment