JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, June 1, 2026

TAPS தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அரசாணை வெளியிடப்பட்டு இதுவரை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் தவிப்பு

*புதிய அரசு ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ அமல்படுத்துமா?*

*கடந்த ஜனவரி மாதம் முதல் ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் தங்களின் ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாமல் தவித்து வரும் சூழலில், புதிய அரசு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்* *அல்லது* 

*பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.*

*கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பழைய ஓய்வூதியம் மறுக்கப்பட்டு,* *பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) அறிமுகப்படுத்தப்பட்டது.*

*இதற்கு எதிராகப் பல்வேறு போராட் டங்கள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2026 ஜனவரி 3 அன்று அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ‘தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) அறிவிக்கப்பட்டது.*

*இதன்படி, 2026 ஜனவரி 1 முதல் ஓய்வு பெறுபவர்கள், தங்களுக்கு விருப்பமானால் சிபிஎஸ் அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.*

*இதனால் ஜனவரி 1-க்குப் பிறகு ஓய்வு பெற்ற பலரும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தையே விரும்புகின்றனர்.*

*ஆனால், இடையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற கார ணத்தால், முந்தைய அரசால் அத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறை கள் மற்றும் அரசாணை வெளியிடப்படவில்லை.*

*இதன் காரணமாக, கடந்த ஜனவரி முதல் தற்போது வரை ஓய்வு பெற்று வரும் ஊழி யர்கள் தங்களின் வாழ்வாதார நிலை என்னவென்று அறியாமல் தவித்து வருகின்றனர்.*

*எனவே, தற்போது பொறுப் பேற்றுள்ள தவெக அரசு, உடனடியாக இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசாணை பிறப்பிக்க வேண்டும் அல்லது 2003-க்கு முந்தைய பழைய ஓய்வூதியத் திட்டத்தையே முழுமையாக அறிவித்து, தவிக்கும் ஓய்வூதி யர்களைக் கரை சேர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*

*2004 இல்* 

*ஒன்றிய பாஜக அரசு* 

*அமலாக்கிய புதிய பென்ஷன் திட்டத்தை அமுலாக்காமல்  பழைய பென்ஷன் திட்டத்தை* 

*சிபிஎம் அரசு முதல் மம்தா அரசு வரை அமுலாக்கப் பட்டு வந்துள்ள ஒரே மாநிலம் மேற்கு வங்கம் மாநிலம் மட்டுமே*

*அங்கு இப்பொழுது நடைபெற்ற தேர்தலில்  பாஜக ஆட்சி  வந்து விட்டது.*

*இனி அங்கும் பழைய பென்ஷன் திட்டம் ரத்தாகும் நிலை* *ஏற்படலாம்.*

🤝*இந்தியா முழுவதும்  மாநில அரசு ஊழியர்கள் ஒன்று சேர்ந்து*

*ஒன்றிய  அரசுக்கு நெருக்கடி கொடுத்து பழைய பென்ஷன் திட்டம்  கொண்டு வரவலுவான போராட்டம் நடைபெற வேண்டும்*

No comments:

Post a Comment