Search This Blog

Wednesday, September 2, 2026

இஸ்ரோ நிறுவனத்தில் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 175 பணியிடங்கள்; பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்;

0 comments

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் அறிவியலாளர் அல்லது பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 175 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Scientist/ Engineer ‘SC’ (Electronics)

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

கல்வித் தகுதி: BE/ B.Tech or equivalent in Electronics & Communication Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை - 10

Scientist/ Engineer ‘SC’ (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 53

கல்வித் தகுதி: BE/ B.Tech or equivalent in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை - 10

Scientist/ Engineer ‘SC’ (Computer Science)

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வித் தகுதி: BE/ B.Tech or equivalent in Computer Science Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை - 10

வயதுத் தகுதி: 16.09.2026 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/102146/Index.html என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250, மற்றும் செயலாக்கக் கட்டணம் ரூ. 500

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.09.2026

No comments:

Post a Comment