
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» முதுகலை ஆசிரியர்கள் தேவை - 2 நிரந்தர பணியிடகள் - நேர்முக தேர்வு நாள் : 28.11.2026
முதுகலை ஆசிரியர்கள் தேவை - 2 நிரந்தர பணியிடகள் - நேர்முக தேர்வு நாள் : 28.11.2026

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் செயல்பட்டு வரும் SSV மேல்நிலைப் பள்ளி (அரசு நிதியுதவி பெறும் பள்ளி)-யில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எம் பள்ளியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எமது பள்ளியில் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதியுள்ள நபர்கள் உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் 28.11.2026 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
.முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (விலங்கியல்) 01 B.Sc., (Zoology), M.Sc., (Zoology) with B.Ed., GT (பொதுப் பிரிவினர்)
2.முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்) 01 B.Sc., (Botany), M.Sc., (Botany) with B.Ed., GT (பொதுப் பிரிவினர்)
கல்வித் தகுதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலையுடன் B.Ed., கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பதிவு நடப்பில் இருக்க வேண்டும்
நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு விவரங்கள்:
மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள், உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
நேரம்: காலை 09.00 மணிக்கு
இடம்: SSV மேல்நிலைப் பள்ளி, கொடுமுடி - 638 151, ஈரோடு மாவட்டம்.









No comments:
Post a Comment