விசேட அணி(சிறப்பு அணி)

31. விசேட அணி ( சிறப்பு அணி ) கவிஞர்கள் தாங்கள் பாட எடுத்துக்கொண்ட பொருளின்பால் சிலபல காரணங்களால் உள்ள குறைகளையும் குறிப்பிட்டுப் பாடுவர் . ஆனால் அக்குறைகளே அப்பொருளுக்குச் சிறப்பையும் பெருமையையும் சேர்ப்பது போலப் பாடலை அமைப்பர் . இதனால் பாடலில் பாடப்படும் பொருள் வனப்பும் வலிமையும் பெற்றுத் திகழ்கிறது . இவ்…
Share:

வாழ்த்தணி

30. வாழ்த்தணி வாழ்த்தணி என்பது இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவிகள் தாம் கருதியதனை விதிப்பது , வாழ்த்து என்னும் அலங்காரம் என்று சொல்லுவர் புலவர். இன்னார்க் ( கு ) இன்ன ( து ) இயைக வென்றுதாம் முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப  --( தண்டியலங்காரம் , 33)
Share:

முன்னவிலக்கணி

29. முன்னவிலக்கணி முன்னவிலக்கணி அல்லது முன்னவிலக்கு அணி என்பது ஒரு பொருளை விவரித்து பின் அதனை விலக்குவது ( மறுப்பது ) என்பதாகும் . " முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே மூவகைக் காலமும் மேவியது ஆகும் ." – ( தண்டியலங்காரம் 43).
Share:

மாறுபடுபுகழ்நிலையணி

28. மாறுபடுபுகழ்நிலையணி மாறுபடுபுகழ்நிலையணி என்பது தான் கருதிய பொருளை மறைத்து , அதனைப் பழிப்பதன் பொருட்டு வேறொன்றைப் புகழ்வது . கருதிய பொருள் தொகுத்து ஆங்குஅது பழித்தற்கு வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை --( தண்டியலங்காரம் , 83)
Share:

மயக்க அணி

27. மயக்க அணி மயக்க அணியும் திரிபு அதிசயமும் ஒன்றாகும் . திரிபு என்பதற்கு ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கல் என்பது பொருள் . ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கும்வழி அதிசயம் தோன்றக் கூறுதல் திரிபு அதிசயம் எனப்படும் . இதனை மயக்க அணி என்றும் கூறுவர் .
Share:

புணர்நிலையணி

26. புணர்நிலையணி புணர்நிலையணி என்பது வினையாலும் , பண்பாலும் இரண்டு பொருளுக்கு ஒரு சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறு சொல்லுவது ஆகும் . வினை , பண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே புணர மொழிவது புணர்நிலை ஆகும் --( தண்டியலங்காரம் , 86)
Share:

புகழாப்புகழ்ச்சி அணி

25. புகழாப்புகழ்ச்சி அணி புகழாப்புகழ்ச்சி யணி என்பது ஒன்றைப் பழிப்பது போன்ற முறையில் , அதன் மேன்மை தோன்றக் கூறுவது ஆகும் . அதாவது புகழாமல் புகழ்தல் .
Share:

பின்வருநிலையணி (பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)

24. பின்வருநிலையணி ( பொருள் பின்வருநிலையணி , சொற்பொருள் பின்வருநிலையணி ) பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது .
Share:

பாவிக அணி

23. பாவிக அணி பொருள் அணிகளில் உள்ள மற்ற முப்பத்து நான்கு அணிகளும் தனிநிலைச் செய்யுளில் ( ஒரு தனிப்பாடலில் ) அமையுமாறு தண்டி ஆசிரியரால் கூறப்பட்டவை ஆகும் . பாவிக அணியோ , தொடர்நிலைச் செய்யுள் என்று கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ , நீதியையோ பற்றியதாகக் கூறப்படுகிறது
Share:

பரிவருத்தனை அணி

22. பரிவருத்தனை அணி பரிவருத்தனை அணி என்பது ஒரு பொருளைக் கொடுத்து , வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைச் சொல்லுவது ஆகும் . பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே --( தண்டியலங்காரம் , 87) பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல் . இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர் . அவை , கொடுத்தது குறைவாய்…
Share:

பரியாய அணி

21. பரியாய அணி பரியாயம் அணி என்பது தான் கருதியதைக் கூறாது , அப்பொருள் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது ஆகும் . கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப் பிறிதுஒன்று உரைப்பது பரியா யம்மே  --( தண்டியலங்காரம் , 72) ( பரியாயம் - ஒன்றுக்குப் பதிலாக , சாமர்த்தியமாக வேறொன்றைச் சொல்லல் )
Share:

நுட்ப அணி

20. நுட்ப அணி கவிஞர் தாம் சொல்லக் கருதியதைக் கூற்றினால் ( சொற்களால் ), வெளிப்படையாகக் கூறுவதும் உண்டு . குறிப்பினால் ( மறைமுகமாகக் ) கூறுவதும் உண்டு . குறிப்பினால் உணர்த்தும் அணிகளுள் நுட்பஅணி ஒன்று . செயல்பாட்டாலும் , செய்யும் தொழிலாலும் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தும் முறையில் அமைத்துப் பாடப்பட…
Share:

நிரல்நிறை அணி

19. நிரல்நிறை அணி நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும் . அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து , அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும் .
Share:

நிதரிசன அணி(காட்சிப் பொருள் வைப்பு அணி)

18. நிதரிசன அணி ( காட்சிப் பொருள் வைப்பு அணி ) உலகில் இயற்கையாகச் சில நிகழ்ச்சிகள் நிகழ்வதைக் கவிஞர்கள் காண்கிறார்கள் . அவற்றை உலக மாந்தர் வாழ்க்கையோடு இயைத்துப் பார்க்கின்றனர் . தாம் கண்ணுற்ற இயற்கை நிகழ்ச்சிகள் மாந்தருடைய நல்ல பண்புகளையும் தீய பண்புகளையும் எடுத்துக்காட்டுவதற்காவே நிகழ்கின்றன என்ற அரிய நோக…
Share:

தீவக அணி

17. தீவக அணி ஒரு குணத்தையோ , தொழிலையோ , இனத்தையோ , பொருளையோ குறிக்கும் ஒரு சொல் , செய்யுளின் ஓர் இடத்தில் நின்று , அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவக அணியாம் . அது முதல் நிலைத் தீவகம் , இடைநிலைத் தீவகம் , கடை நிலைத் தீவகம் என்னும் மூன்று விதமாக வரும் . குணம் தொழில்
Share:

தன்மையணி (தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)

16. தன்மையணி ( தன்மை நவிற்சி அணி , இயல்பு நவிற்சி அணி ) தன்மையணி அல்லது தன்மை நவிற்சி அணி அல்லது இயல்பு நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளது உள்ளபடி கூறுவதாகும் . எடுத்துக்காட்டு • உள்ளம் குளிர்ப்ப - நெஞ்சம் குளிர • ரோமம் சிலிர்க்க - ரோமம் சிலிர்க்க • உரை தள்ள - …
Share:

தன்மேம்பாட்டுரை அணி

15. தன்மேம்பாட்டுரை அணி தன்னைத் தானே புகழ்ந்துரைப்பது தன்மேம்பாட்டுரை அணி எனப்படும். தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை .  - தண்டியலங்காரம் , 71 ( . கா .) எஞ்சினார் இல்லை எனக்கெதிரா இன்னுயிர்கொண்டு அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப் பேராதவர் ஆகத் தன்றிப் பிறர்முதுகில் சாராஎன் கையில் சரம் . -( தண…
Share:

தற்குறிப்பேற்ற அணி

14. தற்குறிப்பேற்ற அணி தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும் . எடுத்துக்காட்டுகள் எ . கா .1: போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட - சிலப்பதிகாரம்
Share:

சுவையணி

13. சுவையணி சுவையணி அல்லது சுவை அணி என்பது கவிஞர்கள் தாம் சொல்ல வந்த கருத்தினை எட்டு சுவைகள் தோன்றப்பாடுவதாகும் . " உள்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே " - தண்டியலங்காரம் 69
Share:

Categories