Breaking

Wednesday, June 20, 2018

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: தேர்வறை அனுமதிச் சீட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்





பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 21) முதல் தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் அலுவலகம் வெளயிட்ட செய்தி:
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை செய்முறைத் தேர்வுக்கு வராதவர்களும், செய்முறைத் தேர்வில் பங்கேற்று 15 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்களும் சிறப்புத் துணைத் தேர்வில் எழுத்துத் தேர்வுடன் செய்முறைத் தேர்வையும் எழுத வேண்டியது கட்டாயம்.



தேர்வறை அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே ஜூன் 25, 26 ஆகிய இரு நாள்கள் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். 

எனவே, தேர்வு மைய தலைமையாசிரியரை தேர்வர்கள் அணுகி விவரத்தைத் தெரிந்துகொள்வதும் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.