Search This Blog

Thursday, July 5, 2018

எமிஸ்' அடிப்படையில் நலத்திட்டம்: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

0 comments
தமிழகத்திலுள்ள, அனைத்து வகை பள்ளிகள், மாணவர்கள்,  ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்கள், 'எமிஸ்' எனும் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது

கடந்தாண்டு வரை,மாணவர்களின் நலத்திட்ட உதவி, ஆசிரியர் எண்ணிக்கை நிர்ணயம் உள்ளிட்டவைகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து, விபரங்கள் சேகரிக்கப்பட்டன



நடப்பு கல்வியாண்டு முதல், தேவைப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை முதல், மாணவர்களின் நலத்திட்ட உதவிகள் வரை, எமிஸ் இணையதள விபரங்களை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டுக்கான எமிஸ் பதிவுகளை, விடுபடாமல் உடனடியாக பதிவு செய்ய, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.