Tuesday, October 16, 2018

1,800 மருத்துவர்கள், செவிலியர்கள் ஓரிரு வாரத்தில் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் ஓரிரு வாரத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



திருச்சி மருத்துவமனையில் 8.3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்காக இன்று தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இதுவரை 21 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்