துணை ராணுவ படைகளில் 61,000 பணியிடங்கள் காலி

துணை ராணுவ படைகளில், 61 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 



இதுகுறித்து, உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும், துணை ராணுவ படைகளில், 61 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டின் பெரிய துணை ராணுவ படையான, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், 18 ஆயிரத்து,460 பணியிடங்கள் காலியாக உள்ளன.

எல்லை பாதுகாப்பு படையில், 10 ஆயிரத்து, 738 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.எஸ்.எஸ்.பி., பிரிவில், 18 ஆயிரத்து, 942 பணியிடங்களும், ஐ.டி.பி.பி., எனப்படும், திபெத் எல்லை போலீஸ் படையில், 5,786 இடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.



Share:

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories