உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்தில், பள்ளி விபரங்களை ஆன்-லைன் பதிவேற்றம் செய்யும் 'சாலாசித்தி', பணிகள் துவங்கியுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் சார்பில், கல்வியாண்டு தோறும், பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர் விபரங்கள் சரிபார்க்கப்படும்.

Please read this also >கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை நீக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
கடந்தாண்டு முதல், பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை உட்பட கூடுதல் தகவல்களுடன், அனைத்து விபரங்களையும், மத்திய மற்றும் மாநில இயக்குனரகங்கள் நேரடியாக ஆன்-லைனில் பார்வையிட்டுக்கொள்ள 'சாலா சித்தி', திட்டம் கொண்டுவரப்பட்டது.

Please read this also >கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை நீக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
இத்திட்டத்தில், பள்ளியிலுள்ள வகுப்பறைகள், ஆசிரியர்களின் முழுமையான விபரம், மாணவர்களின் கல்வித்தரம் உள்ளிட்ட தகவல்களை ஆன்-லைன் மூலம், பதிவேற்றம் செய்கின்றனர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர்.









